ரயிலில் பயணம் செய்யும் போது…. போன் கீழே விழுந்துட்டா?…. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க போதும்… உடனே கிடைக்கும்…!!!
SeithiSolai Tamil January 18, 2025 05:48 AM

உலகத்தில் உள்ள ரயில்வே துறையில் இந்திய ரயில்வே 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயில் பயணங்கள் மிகவும் வசதியாகவும், பாதுகாப்பானதாகவும், செலவு குறைவாகவும் இருக்கின்றது. ஆனால் ரயில் பயணங்கள் பலர் பயணம் செய்யும் பொதுவான போக்குவரத்து என்பதால் தனிநபர் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் அதை நிறுத்த முடியாது. அதேபோன்று ரயிலின் வாசலில் நீங்கள் நின்று கொண்டிருக்கும் போது, பர்ஸ் அல்லது செல்போன் ஏதாவது விலை உயர்ந்த பொருள்கள் கீழே விழுந்தால் அதை எடுக்க வாய்ப்பே கிடையாது.

இந்த சிக்கலை சரி செய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது உங்களுடைய பொருளை நீங்கள் கீழே தவறவிட்டால் அதை திரும்ப பெற ரயில்வே புதிய வழிகளை கொண்டுள்ளது. பொருள்கள் கீழே விழுந்தால் பதற்றத்தில் ரயிலில் உள்ள சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்த வேண்டாம். ஏனென்றால் அது அவசரகாலத்திற்கு பயணப்படுத்துவது. மீறி பயன்படுத்தப்பட்டால் அபராதம் அல்லது சிறை செல்லும் நிலைக்கு ஆளாகி விடுவீர்கள்.

இதற்கு பதிலாக நீங்கள் ஏதாவது பொருளை கீழே தவறவிட்டால் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள தூணில் மஞ்சள் மற்றும் பச்சை வண்ணத்தில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். அதை நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதனை டிடி- யிடம் சொல்ல வேண்டும். அவரிடம் எந்த 2 ரயில் நிலையங்களுக்கு நடுவில் பொருட்கள் தவறவிட்டீர்கள் என்றும், அந்த எண்ணையும் சொல்ல வேண்டும். இதை நீங்கள் உடனடியாக செய்ய முடியாத பட்சத்தில் ரயில்வே காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு 182 என்ற எண்ணிற்கு அல்லது பொது ரயில்வே உதவி எண்ணான 139 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.