பாட்டல் ராதா டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி கொந்தளித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
அறிவு ஜீவி அல்ல அரைவேக்காடு: மிஷ்கினை எல்லாரும் அறிவு ஜீவி, முக்கியமான இயக்குனர்னு சொல்றாங்க. ஆனா என்னைப் பொருத்தவரை அவர் அறிவு ஜீவியும் அல்ல. முக்கியமான இயக்குனர்களில் ஒருவரும் அல்ல. இன்னும் சொல்லப்போனால் இவர் அறிவு ஜீவி கிடையாது. அரைவேக்காடுன்னு என்னால உரக்க சொல்ல முடியும்னு சொல்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி. வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பார்க்கலாமா...
வெளிநாட்டுப் படங்களின் காப்பி: இதுக்கு என்ன காரணம்னா கடந்த காலங்களில் இவர் எடுத்த படங்களைப் பார்த்தாலே இது வெளிநாட்டுப் படங்களின் காப்பின்னு உறுதியாகச் சொல்லலாம். அதுக்கு மிகப்பெரிய உதாரணம் மிஷ்கினே கதாநாயகனாக நடித்து இயக்கிய நந்தலாலா படம்.
இது கிக்ஜீரோங்கற படத்தை அப்பட்டமாக தழுவி எடுக்கப்பட்டது. எந்த இடத்திலும் இந்தப் படம் தழுவப்பட்டதுன்னு சொல்லவே இல்லை. ஆனால் அதுக்கு அப்புறம் அவரது திருட்டுத்தனம் வெளியானது.
காரி உமிழ்வார்கள்: பல படங்களில் இப்படித்தான் காப்பி அடிக்கிறார். கதை, காட்சி, ஷாட் என முழுக்க முழுக்க அது காப்பியாகத் தான் இருக்கிறது. இது தெரியாதவங்க அவரைக் கொண்டாடுறாங்க. தெரிந்தால் அவரது முகத்தில் காரி உமிழ்வார்கள். இது நடக்கும்.
ஆபாசத்தின் உச்சம்: குறிப்பாக இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இவர் பேசுவது ஆபாசத்தின் உச்சமாக அருவருக்கத் தக்க வகையில் பேசுகிறார். அது தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கு. அதிலும் சமீபத்தில் பாட்டல் ராதா பட டிரெய்லர் விழாவில் மிஷ்கின் பேசியதை மன்னிக்கவே முடியாது.
போலித்தனம்: இந்த விழாவில் நான் கலந்து கொள்ளவில்லை. அதற்காக வருத்தப்படுகிறேன். முன்பு இதுபோன்ற விழாக்களில்தான் அதிகம் கலந்து கொள்வேன். ஒரு கட்டத்துல நான் அங்கு போவதை முற்றிலும் தவிர்த்துவிட்டேன். காரணம் எங்கும் போலித்தனம்தான். அந்த விழாவில் டிரெய்லரையோ, பாடலையோ போடுவாங்க. இது குப்பை. ஒருநாள் கூட ஓடாதுன்னு தெரியும்.
செருப்பைக் கழற்றி: ஆனால் விழாவில் கலந்து கொள்றவங்க படம் சூப்பர். பாடலைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம். இது 100 நாள் ஓடும். நிறைய பேசணும்னு இருக்கேன். படத்தோட 100வது நாள் விழாவுல பேசுறேன்னு சொல்வாங்க. இந்த அபத்தங்களை சகிக்க முடியல. அதனால நிறுத்திட்டேன். உண்மையிலேயே பாட்டல் ராதா விழாவுக்கு நான் போயிருந்தால் மிஷ்கின் மீது என்னுடைய செருப்பைக் கழற்றி வீசி இருப்பேன்.
ஆபாசமான வார்த்தை: குறைந்தபட்சம் காரி உமிழ்ந்திருப்பேன். பாட்டல் ராதா ஒரு குடிகாரன் குறித்த படம். மிஷ்கின் தானும் குடிகாரன்தான்னு பெருமையோடு சொல்றாரு. பார்வையாளர்களையும் குடிங்கன்னு சொல்றாரு. நீ குடிக்கலன்னா வாழ்றதுக்கே வேஸ்ட்னு சொல்ற மாதிரி பேசுறாரு. அதுக்கு அப்புறம் சகட்டுமேனிக்கு ஆபாசமான வார்த்தைகளை எல்லாம் பேசுறாரு.
இதுல பெரிய கொடுமை என்னன்னா பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் எல்லாம் இருக்காங்க. இதுல பா.ரஞ்சித் மிஷ்கினோட அருவருப்பான பேச்சுக்குக் கைதட்டுகிறார். வெற்றிமாறன் கையை வாயால் பொத்திக்கிட்டு சிரிக்கிறார். அமீரும் அதை ஆமோதிப்பது போல்தான் காட்டுகிறார்.
அறிவு மழுங்கிவிட்டதா: நான் என்ன கேட்கிறேன்னா நீங்க எல்லாம் ஒரு பக்கம் சமூக பொறுப்புள்ள இயக்குனரா காட்டிக்கறீங்க. பல தளங்களில் அப்படி இயங்குறீங்க. ஆனால் உங்கள் துறையைச் சேர்ந்த ஒருவன் நீங்கள் இருக்கும் மேடையிலேயே ஆபாசமாக பேசுவதைத் தட்டிக் கேட்காமல், சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் ரசித்து கைதட்டிக் கொண்டாடுகிறீர்களே உங்களுக்கும் அறிவு மழுங்கிவிட்டதா என இவர்களைப் பற்றிக் கேட்க வேண்டிய தேவை இருக்கு.
செருப்பு வந்து விழும்: எல்லாத்துக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களும் இருக்காங்க. அவர்களில் இருந்தும் ஒருவர் கூட சிறு எதிர்ப்பையும் தெரிவிக்கல. அவர்களும் கைதட்டி ரசித்ததைக் கேட்க முடிந்தது. நானும் ஒரு பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்வதில் அருவருப்பாக இருந்தது. தொடர்ந்து இதுமாதிரி மிஷ்கின் பேசினால் அந்த விழாவில் அவர் மேல் செருப்பு வந்து விழும். அது நான் வீசியதாகவும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.