Actor Dhanush: ராயன் திரைப்படத்தை இயக்கி முடித்த கையோடு நடிகர் தனுஷ் இயக்கிய திரைப்படம் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து ஒரு காதல் திரைப்படமாக இயக்கப்பட்டு இருக்கிறது. இன்றைய காலத்தில் காதல் எப்படி இருக்கின்றது என்பதை எடுத்துக் கூறும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கின்றார் இயக்குனர் தனுஷ்.
இப்படத்தின் மூலமாக தனது அக்கா மகனை ஹீரோவாக அறிமுகம் செய்திருக்கின்றார். இப்படத்தில் மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தானே தயாரிக்கவும் செய்திருக்கின்றார் நடிகர் தனுஷ். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார்.
இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் 'கோல்டன் ஸ்பேரோ' என்ற பாடல் யூட்யூபில் செம டிரெண்டிங்கில் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாவது சிங்கிள் வெளியாகி இளம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் முதலில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாக படத்தை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.
இப்படம் எப்போது வெளியாகும் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கின்றது. அதுவும் இளம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படம் குறித்து நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.
அந்த பதிவு தற்போது இணையதளம் பக்கங்களில் வைரலாகி வருகின்றது. 'நடிகரும் இயக்குனருமான தனுசுடன் சேர்ந்து நிலவுக்கு என்னுடைய என்மேல் கோபம் திரைப்படத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ஒரு பொழுதுபோக்கான வேடிக்கையான இளம் தலைமுறைகளை கவரும் தனித்துவமான படம் இது.
மேலும் தனுஷ் உங்களிடம் ஒரு கேள்வி ராயன் படத்திற்குப் பிறகு மிக பிசியாக இருந்த போதும் எப்படி உங்களால் இப்படி ஒரு அழகான படத்தை எடுக்க முடிந்தது. என்ன மாதிரியான இயக்கம். படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டு இருக்கின்றார். இந்த பதிவு தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்திற்கு முதல் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்துவிட்டது என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நிலையில் அடுத்ததாக இட்லி கடை திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் 90% முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.