புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவி மீதான அத்துமீறல் தொடர்பாக பொதுநல அமைப்பு சார்பாக உண்மையறியும் குழு சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவி மீதான அத்துமீறல் தொடர்பாக பொதுநல அமைப்பு சார்பாக உண்மையறியும் குழு சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்பு தலைவர்கள் பல்கலைக்கழகத்தின் பதிவாளரை சந்தித்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவி மீதான தாக்குதல் குறித்து விசாரித்தனர்.
மேலும் பல்கலைக்கழகத்தில் உள்ள குறைபாடுகளை கேட்டு எறிந்து இனிவரும் காலங்களில் இது போன்ற விரும்பத் தகாத செயல்கள் நடைபெறாதவாறு சரிசெய்ய நிர்வாகத்தை வலியுறுத்தப்பட்டது.லோக ஐயப்பன்(திராவிட விடுதலை கழகம்),கோ.அழகர(தமிழர் களம்),பி.பிரகாஷ் &ராஜா(தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்),மங்கையர் செல்வம் (தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள்),ஸ்ரீதர்(தமிழக வாழ்வுரிமைக் கட்சி),மற்றும் பொதுநல அமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.