தமிழக அரசையும், போலீசையும் வழி நடத்துவது சட்டமா? அல்லது சாதியா? - வைரலாகும் விசிக சுவரொட்டி.!
Seithipunal Tamil January 21, 2025 04:48 AM

 தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, கஞ்சா போதை ஆசாமிகளின் அட்டகாசம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக, பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி மீது அதன் கூட்டணிக் கட்சிகளும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் திமுக அரசை விமர்சித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த சுவரொட்டியில் தமிழக அரசையும், போலீசையும் வழி நடத்துவது சட்டமா? அல்லது சாதியா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. விசிக சார்பில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டியில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சமீபக் காலமாக நடந்து வரும் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும், வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்க வேண்டிய திமுக அரசும், காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதோடு, தலித் மக்களின் மீது பொய் வழக்குகளை போட்டு வருவதாகவும், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலேயே கூட்டணிக் கட்சியான திமுக அரசை விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.