அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு; குற்றவாளி ஞானசேகரனை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Seithipunal Tamil January 21, 2025 06:48 AM

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கோட்டூர்புரம் போலீசார் கடந்த 25-ஆம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. பின்னர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, ஞானசேகரன் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ஞானசேகரன் மீது ஏற்கெனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல் என 20 வழக்குகள் இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

 சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில்,ஞானசேகரனை  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காவல்துறை தரப்பில் தாக்கல் செய்தது. 

குறித்த, மனு மீதான விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் 09-வது மாஜிஸ்திரேட் முன்பு இன்று நடந்தது. இதனை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 07 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.