நடமாடும் நகை கடை..! 3 1/2 கிலோ தங்க நகைகளை அணிந்து அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர்!
Newstm Tamil January 21, 2025 09:48 AM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு திருவண்ணாமலை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வர்.

இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆந்திரா மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்துள்ளார். அப்போது அவர், சுமார் மூன்றரை கிலோ எடை கொண்ட தங்க செயின்கள், மோதிரம், பிரேஸ்லெட் அணிந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

தொடர்ந்து, அவர் கோயிலை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்துள்ளார். இதில், தொழிலதிபர் சாம்பசிவ ராவிற்கு அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிரசாதங்கள் வழங்கியுள்ளனர்.

இவர் துபாயில் நட்சத்திர விடுதி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மூன்றரை கிலோ தங்க நகைகள் அணிந்து கோயிலுக்கு வருகை தந்த தொழிலதிபரை கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.