நடிகர் விநாயகன், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வர்மன் என்ற பாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தமிழில் திமிரு, மரியான் போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். மலையாளத்தில் வெளியான கம்மாட்டிப்பாடம் படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.
இந்நிலையில் விநாயகன் அவ்வப்போது பஞ்சாயத்தில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார். அந்தவகையில், அவர் போதையில் ரகளை பண்ண வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும், நிற்க முடியாத போதையில், தள்ளாடியபடி எதிர்வீட்டுக்காரருடன் சண்டையில் ஈடுபடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. வாய்த்தகராறில் ஈடுபடும் போது அவரது ஆடை விலகி, அருவருப்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.