பி.எஸ்.என்.எல்., சிம் இருந்தால் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவில் இருந்தும் பேசலாம்.. புதிய வசதி..!
இந்தியாவைப் பொறுத்தவரை, ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஆகிய தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் பி.எஸ்.என்.எல்., என்ற அரசு தொலைத்தொடர்பு நிறுவனமும் இயங்கி வருகிறது. இந்த நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஏராளமான பயனாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஜியோ ஆகிய மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று தங்களது சேவையை பரிமாறிக் கொள்ள முடிவு செய்துள்ளன. இந்த நிறுவனங்களின் சேவை இல்லாத இடங்களில், அல்லது டவரின் பவர் குறைவாக உள்ள இடங்களில், மற்ற நிறுவனங்களின் சேவையை பயன்படுத்த முடியும். இதற்காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இன்ட்ரா சர்கிள் ரோமிங் என்று அழைக்கப்படும் இந்த சேவையை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் துவக்கி வைத்துள்ளது. அதன்படி,பி.எஸ்.என்.எல்., , ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது டவர் பவர் குறைவாக இருக்கும் இடங்களில், மற்ற நிறுவனங்களின் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், 4G மற்றும் குரல் அழைப்பு சேவைகளை தடை இல்லாமல் பெற முடியும்.
மேலும், ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் டவர் குறைவாக உள்ள இடங்களில், உடனடியாக மற்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை இன்ட்ரா சர்கிள் ரோமிங் மூலம் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva