உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பிரம்மாண்ட மகா கும்பமேளா விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றது. கோடிக்கணக்கான பக்தர்களும் ஏராளமான துறவிகளும் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் ஐஐடி பாம்பேயில் ஏரோஸ்பேஸ் பயின்று பின் அதை துறந்து சன்யாசம் புகுந்த அரியானாவில் வசித்து வரும் அபய் சிங் வந்துள்ளார். இவர் ஐஐடி பாபா என்ற அடைமொழியுடன் சமூக வலைதளங்களில் வைரலானார்.
இந்நிலையில் தனது குரு சோமேஸ்வரரை அவமரியாதை செய்வதற்காக சாதுக்களின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றான ஜுனா அகராவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவாகரத்தில் ஜுனா அகரா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒழுக்கமும் குரு பக்தியும் முதன்மையானது எனவும், இந்த கொள்கையை பின்பற்ற முடியாத யாரும் சன்னியாசி ஆக முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதில் ஜுனா அகாராவின் தலைமை துறவலர் மகந்த் ஹரி கிரி அவைசிங்கின் செயல் குரு சிஷ்ய மரபு மற்றும் சன்னியாசம் இவைகளுக்கு எதிரானது, நீங்கள் உங்கள் குருவை அவமதித்து சனாதனத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டியுள்ளீர்கள். உங்கள் மனதில் மதத்திற்கோ அல்லது குரு பீடத்திற்கோ எந்த மரியாதையும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஒரு சமூக வலைதள ரீல் வீடியோவில் அவை சிங் தனது தந்தை மற்றும் குருவுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ஜுனா அகரா முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட பாபா அவை சிங் மற்றொரு துறவியின் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.