அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அலுவலக உதவியாளர்; அருப்புக்கோட்டையில் அதிர்ச்சி.!
Tamilspark Tamil January 22, 2025 05:48 AM
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அலுவலக உதவியாளராக ராஜமாணிக்கம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.

ஆபாச படம் காண்பித்தார்

இதனிடையே, ராஜமாணிக்கம் பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு, ஆபாச படம் காண்பித்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து மாணவிகள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

போக்ஸோவில் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர், ராஜமாணிக்கத்தின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.