தை மாசத்துல இந்த ராசிக்காரர்களுக்கு யோகம்... அதிர்ஷ்டம் அதிகரிக்க இந்த கோயிலில் தரிசனம் பண்ணுங்க!
Dinamaalai January 22, 2025 12:48 PM

தை மாசத்துல இந்த ராசிக்காரர்களுக்கு யோகம் அதிகரிக்கும். இந்த மாசத்துல எந்த கோவிலில் வழிபட்டால் யோகம் அதிகரிக்கும், வாழ்க்கை வசப்படும் என்பதைத் தெரிஞ்சுக்கோங்க.  அதே சமயம் யாருக்கும் கடன் மட்டும் தராதீங்க. கொடுக்கிற கடன் திரும்ப வராது என்பதோடு உறவும் முறிவும். 

மேஷம்: 

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே

தொழில் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை உணரப்போகிறீர்கள். சில நேரங்களில் அதிரடியான செயல்பாடுகளால் பணியிடத்தில் சவால்கள், மோதல்கள்  உருவாகலாம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.   உடல் ஆரோக்கிய குறைபாடுகள் உருவாகலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. காரியத் தடை , காலதாமதம் ஏற்படலாம். தினசரி கடவுள் வழிபாடு அனுகூலமான பலன்களை தரலாம்.  திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வந்தால்   விருப்பமான காரியங்கள் நிறைவேறும் வாய்ப்புக்கள் அதிகம்.  

ரிஷபம்: 

சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப  ராசிக்காரர்களே  

சவால்கள் நிறைந்த காலகட்டம் இது. இந்த மாதத்தில் தொடக்கத்தில் இருந்தே வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது உத்தமம்.   குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். அரசு வேலைகளில் ஆதாயம் பெருகும். இந்த காலகட்டத்தில் திருவண்ணாமலை சென்று வந்தால் வாழ்க்கையில்  பெருமையும் புகழும் அதிகரிக்கும்.  

மிதுனம்: 

புதனை அதிபதியாகக் கொண்ட  மிதுன ராசிக்காரர்களே

தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் திடீர் பணவரவு, வெற்றி கிட்டும்.  சுபகாரியங்களில் சவால்கள் ஏற்படலாம். உடல் நலக் குறைபாடு உருவாகலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும்.  கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம்.  திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபாடு செய்து வர துன்பங்கள் தூர விலகும். 

கடகம்: 

சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே 

புதிய முயற்சிகளில் சவால்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் கொடுக்கல் வாங்கல் எதிர்பார்த்த அளவு கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியத்தடை ஏற்பட்டாலும் முயற்சிக்கேற்ப பலன் நிச்சயம். தினசரி கடவுள் வழிபாடு அனுகூலமான பலன்களை தரும். 
தஞ்சாவூர்  பிரகதீஸ்வரர் பெருமானை வழிபாடு செய்து வர  நினைத்த காரியம் கைகூடும்.  

சிம்மம்: 

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே

தைமாதம் முழுவதுமே உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய காலகட்டம்.  சுபகாரியங்களில் தடை உருவாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.  தொழிலில்  எதிர்பார்த்த பணவரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் உழைப்பிற்கேற்ப நல்வாய்ப்புக்கள் பெருகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.  பங்குச்சந்தை வியாபாரத்தில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. 

காளகஸ்திநாதரை வழிபட்டு வர  கஷ்டங்கள் பறந்தோடும்.  

கன்னி: 

அறிவுத் திறனை அள்ளித்தரும்  கன்னி ராசி அன்பர்களே... 

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்.   தொழிலில் கணிசமான லாபம் வரலாம். வீட்டில் சுபகாரியம் கைகூடும்.  இதுவரை இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உருவாகும்.  உறவினர்களால் சவால்கள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.   முத்துமாரியம்மனை வழிபட்டு வர  நிறைவான பலன் பெறலாம்.

துலாம் 

துலாம் ராசி அன்பர்களே...  பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறும் காலகட்டம்.  சுபகாரியங்கள் தள்ளிப் போகலாம். அதே நேரத்தில் முயற்சிக்கேற்ற பலன் நிச்சயம். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் உருவாகலாம்.   வெளியூர் பயணங்களில்  எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.  திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாளை வழிபட்டு வர  சகல சௌபாக்கியங்களும் சித்திக்கும்.  

விருச்சிகம் 

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே...  விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டு போனதில்லை என்பதற்கேற்ப விட்டு கொடுத்து வாழ்ந்தால் வாழ்வில் வளம் நிச்சயம். தொழில் எதிர்பார்த்த பணவரவு கிட்டும். ஆன்மிக யாத்திரையால் அதிக பலன் பெறலாம். புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம்.  வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.   சுபகாரியங்கள் கைகூடும்.  பழனி முருகன் ஆலய வழிபாட்டால் செல்வம் பெருகும்.  

தனுசு  

வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே

இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். பூர்வீக சொத்துக்களால் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளலாம் இதனால் எச்சரிக்கையாக செயல்படுவது உத்தமம். நண்பர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.   யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.  ஆத்திரம் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்வது உத்தமம்.  உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.   தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர  தொட்டதெல்லாம் துலங்கும். 

மகரம்  

மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிக்காரர்களே  

எண்ணிய யாவும் ஈடேறும் காலகட்டம். தொழிலில் லாபம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகளில் நற்பலன்கள் ஏற்படும். புதிய வீடு வாங்கும் யோகம் உருவாகும். பணியிடங்களில் பதவி உயர்வு கிட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கைகொடுக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது உத்தமம்.  திருநள்ளாறு  ஈஸ்வரரை வழிபட்டு வர  யோகம் பெருகும்.

கும்பம் 

சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே

சேமிப்புக்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் விலகி சுமூகமான நிலை உருவாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுக்கள், பதவி உயர்வு கிட்டும். ஜாமீன் கையெழுத்துக்களால் சிக்கல் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரியாக இருப்பது நல்லது.  சுபநிகழ்வுகள் கைகூடும். உடல் நலக் குறைபாடுகள் நீக்கும்.  யோக நரசிம்மரை வழிபட்டு வர  ஆரோக்கியம் பெருகும்.  

மீனம்  

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசிக்காரர்களே

தளர்ந்த காரியங்கள் அனைத்தும்  உயர்ந்த நிலைக்கு வரும் காலகட்டம். தொழில் பெருகி கொடுக்கல் வாங்கல் அதிகரிக்கும். பணியிடத்தில் இடமாற்றம் பதவி உயர்வு கிட்டும். உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம். தொழில் விருத்தி அடையும். வெளிநாட்டு வாய்ப்புக்கள் குவியும்.  கள்ளழகரை  வழிபட்டு வர தொழில் விருத்தியாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.