திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூரில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு சிவகுமார் என்பவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு 54 வயது ஆகிறது. இவர் அந்த பள்ளியில் படித்து வரும் ஒரு 6-ம் வகுப்பு மாணவியிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறினார். இது தொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சிவகுமார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. மேலும் இதைத் தொடர்ந்து அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.