சொகுசு விடுதி தீ விபத்து... பலி எண்ணிக்கை 76 ஆக உயர்வு!
Dinamaalai January 22, 2025 06:48 PM


 துருக்கியில் சமீபகாலமாக அடுத்தடுத்து  தீ விபத்து, விமான விபத்து என மக்களை அச்சப்படுத்தி வருகிறது.  இதற்கு மனித கவன குறைவு உட்பட பல காரணங்கள் இருந்து வருகின்றன. இப்படித்தான் ஒரு வாரமாக காலிஃபோர்னியா காட்டுத் தீ ஒரு ஊரையே அச்சத்திற்கு உள்ளாக்கியது.  பிரபலங்களின் வீடுகள் கூட தீக்கிரையாக்கப்பட்டன. துருக்கியில் சொகுசு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் கர்தல்காயா சொகுசு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த பகுதி சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் பகுதியாக உள்ளது.  துருக்கியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வருகின்றனர்.  கிராண்ட் கார்தால் சொகுசு விடுதியில் ஏராளமான மக்கள் விடுமுறை காரணமாக தங்கள் குழந்தைகளுடன் தங்கி இருந்தனர். 12 மாடி கட்டிடத்தில் 230க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அந்த சொகுசு விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜனவரி 21ம் தேதி அந்த நட்சத்திர ஓட்டலில் சமையலறையில் அதிகாலை 3:30 மணிக்கு  திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தீ அதிவேகமாக பரவியதன் காரணமாக  அவர்கள் கண்ணாடியை உடைத்து வெளியே வர ஆரம்பித்தனர். ஜன்னல் வழியாக கீழே குதித்ததில் சிலர் உயிரிழந்தனர். 


 விடுதி முழுவதும் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்டதால், தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்பதிலும் சிக்கல் நிலவியது. வெகு நேரம் போராடிய மீட்புக்குழுவினர், உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே கொண்டுவந்தனர். இந்த தீவிபத்தில் 76 பேர் உயிரிழந்ததாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும்  துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.