சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மாட்டு கோமியத்தில் நன்மை இருக்கிறது என்று கூறினார். அதாவது கோமியம் குடித்தால் 15 நிமிடங்களில் காய்ச்சல் சரியாகும் என்று காமகோடி கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு கண்டனங்கள் என்பது குவிந்தது. ஆனால் தமிழிசை சௌந்தர்ராஜன் மாட்டு கோமியம் அமிர்த நீர் எனவும் அதில் 80 வகையான காய்ச்சலை குணமாக்கும் நற்குணங்கள் இருக்கிறது என்றும் கூறினார். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இது பற்றி பேசியுள்ளார்.
இதற்காக கோமியம் குடித்தால் நல்லது என்று அவர் தனியார் இடத்தில் தான் பேசியுள்ளார். அவர் வகுப்பறையில் அதைப் பற்றி பேசவில்லை. தனிப்பட்ட முறையில் காமகோடி ஒரு நல்ல மனிதர் என்றும் அவர் திறமையானவர் என்றும் கூறியுள்ளார். இதே போன்ற பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறும் போது, எந்த ஒரு உணவும் அவரவர் விருப்பம் சார்ந்தது. கோமியத்தை குடிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று கூறினார். மேலும் இதுவரையில் கோமியத்தில் மருத்துவ குணங்கள் இருப்பதாக எந்தவித ஆய்விலும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.