சீமான் படத்தை துடைப்பத்தால் அடித்து போராட்டம்! கொந்தளித்த பெரியாரிஸ்டுகள்
Top Tamil News January 22, 2025 10:48 PM

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமானை கண்டித்தும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும்,  உருவபொம்மை எரித்தும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில்  சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியாரைத் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் அமைப்புகளை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


போராட்டத்தின் போது சீமான் ஆர்எஸ் எஸ் உடை அணிந்து கையில் தாமரை சின்னத்தை வைத்திருப்பது போன்ற பதாகைகளை ஏந்தி துடைப்பத்தால் அடித்தும், சீமானின் உருவ பொம்மையை எரித்தும், சீமான் உருவம் பொறித்த பேனரை துடைப்பத்தாலும் செருப்பாலும் அடித்தும் ஒப்பாரி வைத்தும் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.