பாலிவுட்டின் பிரபல நடிகரான சைப் அலிகான் இந்த 16 ஆம் தேதி நள்ளிரவு நேரம் மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார். இதையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைப் அலிகானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆறு இடத்தில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அவரது உடலில் இருந்த ஒரு சிறிய கத்தி துண்டை வெற்றிகரமாக வெளியில் எடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சைஃப் அலிக்கான் மருத்துவமனையில் இருந்தார்.
இதனிடையே காவல்துறையினர் கத்திகுத்து தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஐந்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த சைப் அலிகான் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்பியுள்ளார்.