தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. தற்போது அவருடைய காட்டில்தான் மழை என்பது போல அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர்தான் இப்போது லீடு ரோலில் நடித்து வருகிறார். விஜய் அஜித் கமல் என அடுத்தடுத்து அவருடைய படங்கள் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. விஜயுடன் அவர் கடைசியாக நடித்தது லியோ திரைப்படம். அந்த திரைப்படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.
ஏனெனில் 14 வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ஒருவித எதிர்பார்ப்பு இருந்தது. இருந்தாலும் அவர்களின் அந்த ஜோடி அனைவரையும் ரசிக்கும்படியாக வைத்தது. அதனை அடுத்து அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட அஜித்துடன் நான்கு படங்களில் ஜோடியாக நடித்தவர் திரிஷா. அந்த நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் .அந்த வரிசையில் விடா முயற்சி திரைப்படமும் அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திரிஷாவை பொறுத்த வரைக்கும் இவருக்கு செகண்ட் இன்னிங்ஸ்தான் என்று கூறலாம். ஏனெனில் அவருடைய திருமண நிச்சயதார்த்த விவகாரம். அதிலிருந்து படங்களில் அவருக்கான வாய்ப்பு குறைந்து இருந்தது. அந்த நேரத்தில்தான் நயன்தாரா டாப் நடிகையாக முன்னுக்கு வந்தார். அப்போது த்ரிஷாவின் மார்க்கெட் குறைந்தது. அந்த நிலையில்தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு கை கொடுத்தது. குந்தவையாக மீண்டும் ரசிகர்களின் மனதில் ஒரு இளவரசியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தார் திரிஷா.
அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து இப்போது பிசியாக வலம் வரும் நடிகையாக திகழ்ந்து வருகிறார் திரிஷா. இந்த நிலையில் த்ரிஷாவை பற்றி ஒரு தகவல் பரபரப்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவை த்ரிஷா எடுத்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இது சம்பந்தமாக த்ரிஷா அவருடைய வீட்டில் கூறியதாகவும் அதற்கு த்ரிஷாவின் தாயார் த்ரிஷாவிடம் பிரச்சனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதாவது சினிமா போர் அடித்து விட்டதாக திரிஷா நினைக்கிறாராம். ஆனால் அதற்கு அவருடைய தாயார் சம்மதிக்கவில்லை .அதனால் இருவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இது நடக்கிற காரியம் மாதிரி இல்லை என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .ஏனெனில் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகி அது பெரிய ஹிட் ஆகிவிட்டால் தயாரிப்பாளர்கள் மீண்டும் த்ரிஷாவின் வீட்டின் முன் தான் நிற்பார்கள். அதனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது.