ஹரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் பகுதியில் நடந்த ஒரு கொள்ளை சம்பவம் மிகவும் வினோதமாக இருக்கிறது. இந்த பகுதியில் ரஞ்சித் மண்டேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் அதற்காக தன்னுடைய வீட்டில் பெண்களின் தலைமுடியை அதிகளவில் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை நேரத்தில் திடீரென ரஞ்சித் வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தனர்.
அவர்கள் வீட்டில் இருந்த 150 கிலோ எடை கொண்ட தலைமுடியை திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு 7,00,000 ரூபாயாகும். அதோடு 2 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் திருடிவிட்டு சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பாக பக்கத்துக் கடையிலிருந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோதுதான் விஷயம் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.