தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தவந்தவன்தான் ராஜராஜன், 37 வயதான ராஜராஜன் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக தாம்பரம் காவல் நிலைய போலீசார் புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர் . இதையடுத்து இந்தப் புகாரின் பேரில் அலுவலக மேலாளர் ராஜராஜனை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பின்னர் போலீசார் விசாரணைக்குப் பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேலாளரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.