அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!
Webdunia Tamil January 23, 2025 12:48 AM

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், அங்கு நுழைந்த திருடன் ஒருவர் சயிஃப் அலிக்கானை 6 இடங்களில் சரமாரியாக குத்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

சயிஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவரால் கார் ஓட்ட முடியாது என்பதால் தனது மகனுடன் சாலைக்கு சென்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அழைத்துள்ளார். அப்போது பஜன்சிங் ராணா என்ற ஆட்டோ டிரைவர் உடனடியாக தனது ஆட்டோவில் சயிஃப் அலிக்கானை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது தான் காப்பாற்றியது ஒரு பிரபல நடிகரை என்று பஜன்சிங்கிற்கு தெரியாதாம்.

அவரது உதவியால் தற்போது உயிர் பிழைத்துள்ள நிலையில் தான் குணமானதும் பஜன்சிங் ராணாவை நேரில் அழைத்து நன்றி தெரிவித்து அவருக்கு பண உதவியும் செய்துள்ளார் சயிஃப் அலிகான், இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.