பெண்களே உஷார்... பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி இளம்பெண் பலியான சோகம்!
Dinamaalai January 22, 2025 07:48 PM

பெண்களே உஷார்... பைக்கில் செல்லும் போது பாதுகாப்பாக போங்க. பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் தஸ்தகீர் மகன் ஜம்சித் (36). இவரது மனைவி தாஹீராபானு (33). இவர்கள் திண்டிவனத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டனர். பின்னர் மதியம் அங்கிருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

செஞ்சி அருகே உள்ள காந்திநகர் பகுதியில் வந்த போது, பின்னால் அமர்ந்திருந்த தாஹிரா பானுவின் துப்பட்டா, மோட்டார் சைக்கிள்சக்கரத்தில் சிக்கியது. இதனால், அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தாஹிரா பானுவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.