மோடி அரசு சமீபத்தில் 8 வது ஊதியக் குழுவை அறிவித்தது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்குப் புதிய பயணச் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் தேஜஸ், வந்தே பாரத் ரயில்களில் பயணம் செய்யவும், பயணச் செலவைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பதவி நிலைக்கு ஏற்பப் பயணச் சலுகைகள் வேறுபடும். மத்திய அரசு ஊழியர்கள் இப்போது தேஜஸ், வந்தே பாரத், ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் பயணம் செய்யலாம். சூப்பர்ஃபாஸ்ட் ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், ஊழியர்களின் பயணம் இன்னும் வசதியாகவும் விரைவாகவும் அமையும்.
பதவி நிலைக்கு ஏற்ப வசதிகள்
நிலை 12 அல்லது அதற்கு மேல்: எக்சிகியூட்டிவ் சேர் காரில் பயண வசதி.
நிலை 6 முதல் 11 வரை: ஏசி 3 டியரில் பயண அனுமதி.
நிலை 5 அல்லது அதற்குக் கீழே: ஏசி 3 டியரில் பயண வசதி.
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை , 2 முறை சொந்த ஊருக்கு அல்லது நாட்டின் வேறு எங்காவது பயணம் செய்வதற்கான பயணச் செலவு ஒவ்வொரு இரண்டு ஆண்டு காலத்திற்கும் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம்.
ஊழியர்கள் 4 ஆண்டுகளில் இரண்டு முறை இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதல் இரண்டு ஆண்டுகளில் சொந்த ஊர் பயணத்திற்கும், 2 வது இரண்டு ஆண்டுகளில் விடுமுறைக்கால பயணத்திற்கும் பயணச்செலவைப் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு, அரசு ஊழியர்களுக்குப் பல சலுகைகளை மோடி அரசு அறிவித்துள்ளது. புதிய ஊதியக் குழு 2026 முதல் செயல்பாட்டுக்கு வரும். இதன் விளைவாக, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ 51,000 ஆக இருக்கும். அதே போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 25,000 ஆக இருக்கும். மேலும் பல சலுகைகள் இந்த ஆண்டில் காத்திருக்கின்றன.