பாகிஸ்தான் நாட்டில் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால் இந்தியா கலந்துகொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு போட்டி நடைபெறுவதற்கு முன்பாக ஒவ்வொரு அணியின் கேப்டன்களும் போட்டி நடைபெறும் நாட்டுக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்திய அணியின் கேப்டனை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அரசு அனுப்ப மறுத்து விட்டது.
அதன் பிறகு போட்டி நடைபெறும் நாட்டின் பெயரை ஜெர்சியில் அச்சிட வேண்டும். ஆனால் பிசிசிஐ பாகிஸ்தான் பெயரை இந்திய ஜெர்சியில் அச்சடிக்க மறுத்துவிட்டது. இதற்கு தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதாவது விளையாட்டில் அரசியல் செய்வது நல்லது கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. விளையாட்டில் அரசியலை கொண்டுவர பிசிசிஐ முயற்சிக்கிறது. மேலும் இது விளையாட்டுக்கு நல்லதல்ல என்பதால் இதனை ஐசிசி உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.