சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு திருவிக நகர் 7வது தெருவில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கொருக்கு பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சேர்ந்த மாதவனுக்கும் ராஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அவர்களை பொதுமக்கள் சமாதானம் செய்தனர். இதனை அடுத்து டாஸ்மாக்கில் மது குடித்துக் கொண்டிருந்த ராஜனுக்கும், மாதவனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த மாதவன் தனது நண்பரான அருண்குமாருடன் இணைந்து ராஜனை தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ராஜன் ஆர் கே காவல் நிலையத்திற்கு சென்று இரண்டு பேர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.
அப்போது பணியில் இருந்த போலீஸ் அதிகாரி புகார் எழுதும் படி ராஜரிடம் கூறியுள்ளார். ஆனால் போதையில் இருந்த ராஜன் கோபத்தில் புகாரை எழுதிக் கொடுக்காமல் பெட்ரோலை உடல் மீது ஊற்றி வைத்துக் கொண்டார். அவரைப் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ராஜனின் சகோதரி அழுது கொண்டே எனது தம்பியை உடனடியாக ஊசி போட்டு கொன்று விடுங்கள். அவர் உயிருக்கு போராடுவதை என்னால் பார்க்க முடியவில்லை என கதறி அழுதார். ராஜனின் மனைவி விஜி தனது கணவரை போலீசார் திட்டி அனுப்பியதால் மன உளைச்சல் இப்படி முடிவை எடுத்ததாக கூறியுள்ளார். போலீசார் ஆறுதல் கூறி அனுப்பி வைத்திருந்தாள் என் கணவர் எங்களை இந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்க மாட்டார் என அழுதார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.