புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர் .பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட வன்கொடுமையை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் சட்டமன்றம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்டு மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர் .பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .அப்போது பேசிய மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் ,தொழில்நுட்ப பல்கலைக்குள் அத்துமீறி இளைஞர்கள் நுழைந்ததை கண்டித்து,மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர் .