கர்நாடக தலைநகர் பெங்களூரில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள கேஆர் மார்க்கெட் பகுதியில் உள்ள குடோன் தெருவுக்கு அருகில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் யெலஹங்கா பகுதிக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த பெண், அங்கு இருந்த இருவரிடம் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்து வருமா என்று கேட்டுள்ளார்.
அந்த பெண்ணின் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த பெண் உதவி கேட்ட இரு ஆண்களும் உதவி செய்பவர்களைப் போல் கட்டிக்கொண்டு பேருந்து எங்கு நிற்கும் என்று தங்களுக்குத் தெரியும் என்று கூறி பெண்ணை குடோன் தெருவுக்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அவரிடம் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருவதாக இன்று போலீசார் தெரிவித்துள்ளனர்.