வள்ளுவரை களவாட ஒரு கூட்டமே உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Top Tamil News January 21, 2025 07:48 PM

வள்ளுவர், வள்ளலார் உள்ளிட்டோரை களவாட ஒரு கூட்டமே உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அழகப்பா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெரிய நூலகங்களை திறக்க முடியாதவர்கள் சிறிய படிப்பகங்களையாவது தொடங்க வேண்டும். எனக்கு பரிசாக வந்த 2 லட்சம் புத்தகங்களை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் முதற்கட்டமாக 1,000 நூல்களை இந்த நூலகத்திற்கு அனுப்புகிறேன். பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். பல்கலைக்கழக வேந்தர் பதவியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் இருக்க வேண்டும். 

பார்த்து பார்த்து திட்டங்களை நாங்கள் செய்யும்போது வேந்தர் பதவி மட்டும் ஆளுநருக்கா? வள்ளுவர், வள்ளலார் உள்ளிட்டோரை களவாட ஒரு கூட்டமே உள்ளது. தமிழ் மண்ணில் சமத்துவத்தை பேசியோரை களவாட ஒரு கூட்டமே சதி செய்கிறது. திருவள்ளுவரை யாரும் கபளீகரம் செய்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். களவாட நினைக்கும் கூட்டத்திற்கு எதிராக காவல் அரணாக தமிழர்கள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.