இதை தெரிஞ்சிக்கோங்க..! மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணம் என்ன..?
Newstm Tamil January 23, 2025 11:48 AM

மலச்சிக்கல் என்பது ஒரு நாள்பட்ட பிரச்சனையாகும். குளிர்காலத்தில் இந்தப் பிரச்சனை அதிகமாகும். இதன் வலி மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும்.

மலச்சிக்கல் பல காரணங்களால் ஏற்படுகிறது. கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் என மருந்துகளின் பக்கவிளைவாக மலச்சிக்கல் ஏற்படலாம். சில வைட்டமின்களின் பற்றாக்குறையும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்று ஊட்டச்சத்து நிபுணர் அவ்னி கவுல் கூறுகிறார்.

வைட்டமின் சி குறைவாக உட்கொள்வது குழந்தைகளுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்களுக்கு ஃபோலேட் மற்றும் மெக்னீசியமும் கொடுக்கப்பட வேண்டும்.

சிட்ரஸ் பழங்கள், பச்சை மிளகாய், புதினா இலைகள், பார்ஸ்லி இலைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

உணவில் வைட்டமின் பி-12 குறைவாக இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். வைட்டமின் பி-12 இறைச்சி, பால், முட்டை உள்ளிட்ட பல்வேறு புரதங்கள் மற்றும் தானியங்களில் காணப்படுகிறது.

நாள்பட்ட மலச்சிக்கலுக்கு வைட்டமின் டி குறைபாடும் காரணமாகவும் உண்டாகும். மலச்சிக்கலைத் தவிர்க்க உங்கள் உணவில் இந்த வைட்டமின் ஏராளமாக இருக்க வேண்டும்.

இறைச்சி, எண்ணெய் மீன், பால் வைட்டமின் டி நிறைந்துள்ளது தவிர, சூரிய ஒளியில் இந்த வைட்டமின் உங்களுக்கு மிகுதியாகக் கிடைக்கும்.

மேலும் உணவில் மெக்னீசியம் இருக்க வேண்டும். மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்க இந்த மூலப்பொருளைச் சாப்பிட மறக்காதீர்கள். பச்சை காய்கறிகள், விதைகள் மற்றும் நட்ஸ் போன்ற உணவுகள் மெக்னீசியத்தை அதிக அளவில் வழங்குகின்றன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.