Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!
Dhinasari Tamil January 23, 2025 04:48 PM

#featured_image %name%

இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025

போட்டியை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இங்கிலாந்து அணியை (20 ஓவர்களில் 132 ரன், ஜாஸ் பட்லர் 68, ஹாரி ப்ரூக் 17, வருண் சக்கரவர்த்தி 3/23, அர்ஷதீப் சிங், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கட்) இந்திய அணி (12.5 ஓவர்களில் 133/3, அபிஷேக் ஷர்மா 79, சஞ்சு சாம்சன் 26, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 19, ஹார்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 3, ஆர்ச்சர் 2/21, அதில் ரஷீத் 1/27) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன் விக்கட் கீப்பராக இடம்பெறுவதால், துருவ் ஜுரல் விளையாடவில்லை; முகம்மது ஷமி, வாஷிங்க்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோரும் விளையாடவில்லை. அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகிய மட்டையாளர்கள்; ஹார்திக் பாண்ட்யா, நிதீஷ் ராணா இருவரும் பந்துவீசும் ஆல்ரவுண்டர்கள்; ரிங்கு சிங் இறுதியில் அடித்து ஆடும் ஒரு ஆட்டக்காரர்; அர்ஷதீப் வேகப்பந்து வீச்சாளர்; வருண், அக்சர், பிஷ்னோய் மூவரும் சுழல் பந்து வீச்சாளர்கள்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (பூஜ்யம் ரன்) மற்றும் பென் டக்கட் (4 ரன்) இருவரும் அர்ஷதீப் பந்து வீச்சில் மூன்று ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜாஸ் பட்லர் (44 பந்துகளில் 68 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) ஹாரி ப்ரூக் (14 பந்துகளில் 17 ரன்) இருவரும் வேகமாகவே ரன் சேர்த்தனர். எட்டாவடு ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஹாரி ப்ரூக்கும் லியன் லிவிங்க்ஸ்டோனும் ஆட்டமிழந்தனர். ஆட்டம் இந்திய அணியின் கைகளில் வந்தது. அதன் பின்னர் இந்திய அணிக்கு ஏறுமுகம்ந்தான். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 132 ரன் எடுத்திருந்தது.

          133 என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணி அதிக கஷ்டப்படவில்லை. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தபோதும் 20 பந்துகளில் 26 ரன் அடித்து அணியை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார். அதன்பின்னர் அபிஷேக ஷர்மா (34 பந்துகளில் 79 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) அதிரடியாக ஆடினார். திலக் வர்மா (16 பந்துகளில் 19 ரன்) அவருக்குத் துணை நின்றார். 12.5 ஓவரில் 133 ரன் அடித்து இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரை வெற்றியுடன் தொடங்கி 1-0 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

          அடுத்த ஆட்டம் சென்னையில் 25ஆம் தேதி நடைபெற உள்ளது,   

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.