சென்னையில் உள்ள பெரியபாளையம் பகுதியில் 24 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். சிறுவனை காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இருவரையும் கண்டுபிடித்தனர்.
அந்த சிறுவனை மீட்ட போலீசார் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில் புழல் சிறையில் தற்போது கம்பி எண்ணுகிறார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். மேலும் அந்தப் பெண்ணின் விபரீத ஆசையால் தற்போது அவருடைய இரு குழந்தைகளும் ஆதரவற்று பரிதவிப்பில் இருக்கிறார்கள்.