தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பைரவ தீபம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விஜய ரங்கராஜூ. அதன் பின்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். மோகன்லாலின் வியட்நாம் காலனி என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து மலையாளத்திலும் பிரபலமானார்.
தமிழ் சினிமாவிலும் இவர் நடித்துள்ள போது ஹைதராபாத் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சமீபத்தில் காயம் அடைந்துள்ளார். அதற்காக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய மரண செய்தி தென்னிந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இவருடைய மரணத்தை அறிந்த ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.