“அம்மாவை பாரு டா…எழுந்திரு…” 1 வயது மகனை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!
SeithiSolai Tamil January 24, 2025 01:48 PM

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரியில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாய்ஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஆல்வின் ஜோ, அகஸ்டின் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று ஜாய்ஸ் வீட்டிற்கு வெளியே அமர்ந்து அகஸ்டினுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அதன் பிறகு குழந்தையை வெளியே விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அகஸ்டின் அங்கு இல்லை.

தனது குழந்தையை தேடி பார்த்த போது தெரு வடிகாலில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் அகஸ்டின் தலைகீழாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அகஸ்டின் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.