அதிமுக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் கருத்து - அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்
Vikatan January 24, 2025 05:48 PM

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலகத்தின் தொன்மையான மொழி தமிழ். இதை பிரதமரும் சொல்லி வருகிறார். சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ். இரும்பு நம்முடைய பகுதியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்தது என்பது தமிழர்களின் பெருமை.

அண்ணாமலை

என்னுடைய 48 நாள் விரதத்தை திருப்பரங்குன்றத்தில் நிறைவு செய்ய  உள்ளேன். டங்ஸ்டன் விவகாரத்தில் மாநில அரசு மத்திய அரசை விரோதியாக பார்க்க காரணம் என்ன. டங்ஸ்டன் விவகாரத்தில் ஆக்கபூர்வமான பணியை செய்துள்ளோம்.

நாங்கள் பெரியாரின் கொள்கையை ஏற்கவில்லை. அதை கண்டு கொள்ளவும் இல்லை. மக்கள் பெரியாரை மறந்து அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பெரியாரை வைத்து அரசியல் நாங்கள் செய்ய விரும்பவில்லை. முதலமைச்சர் மீண்டும் பெய் பேச ஆரம்பித்துவிட்டார்.

கச்சத்தீவு

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பேசியது என்ன. கொடுத்து. சுய லாபத்துக்காக கச்சத்தீவு கொடுக்கப்பட்டது ஏன். கச்சத்தீவு கொடுத்த காரணத்தால் இந்தியாவுக்கு என்ன கிடைத்தது. மீனவர்களின் எல்லை சுருங்கியது. மீண்டும் மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்.

இந்தப் பிரச்னையில் திமுக, காங்கிரஸ் வீடு வீடாக சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவு மீட்க வேண்டிய வேலைகளில் பிரதமர் இறங்கியுள்ளார். அதிமுக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் அவருடைய பாணியில் கருத்து சொல்லியுள்ளார். அதை தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்கள்.

நயினார் நாகேந்திரன்

பொத்தாம் பொதுவாக கூட்டணி அமையாது. எல்லா கட்சிகளும் லாப நஷ்டத்தை கணக்கிட்டு தான் கூட்டணி அமைக்கிறார்கள். 2026 தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான். அது எப்படி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.