BREAKING: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு….? வெளியான அதிரடி உத்தரவு….!!
SeithiSolai Tamil January 25, 2025 12:48 AM

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். போக்குவரத்து துறை செயலாளர் தலைமையிலான உயர்மட்ட குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. அரசு போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொதுமக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.