வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!
வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து திமுக எம் பி ஆர் ராசா உள்பட 10 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு மக்களவையில் வக்ஃப் சட்ட திருத்த மசோதா மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில் இந்த மசோதாவின் படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினர்களாக இடம் பெற செய்வது,வக்ஃப் வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்பது, வக்ஃப் நிலமா இல்லையா என்பதை மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றம் முடிவு செய்ய அதிகாரம் அளிப்பது போன்ற திருத்தங்கள் செய்யப்பட்டது.
இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இந்த கூட்டு குழுவில் திமுக எம்பி ஆ ராசா உள்பட 21 மக்களவை உறுப்பினர்கள், திமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது அப்துல்லா உட்பட 10 மாநிலங்களை உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த கூட்டுக் குழுவில் அமளியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடிப்படையில் ஆ ராசா உள்பட 10 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆ ராசா, கல்யாண் பானர்ஜி, முகமது ஜவைத், அசாதுதீன் ஓவைசி, நாசிர் உசேன், மொஹிபுல்லா, எம். அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதிமுல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Edited by Siva