தமிழ்நாட்டின் அடையாளங்களை அழிக்க முயற்சி செய்கிறார்..கவர்னர் மீது உதயநிதி ஸ்டாலின் சாடல்!
Seithipunal Tamil January 25, 2025 12:48 AM

நம்முடைய தமிழ்நாட்டின் அடையாளங்களை ஒவ்வொன்றாக அழிக்கும் முயற்சியில் கவர்னர் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

அப்போது விழாவில்  துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-நீங்கள் கழகத்தின் கொள்கையை ஏற்று இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றீர்கள் என்றும்  ஆனால் உங்களைப்போல ஆயிரக்கணக்கானோர் வருவதற்கு சில தயக்கத்தோடு அங்கு இருப்பார்கள் என்றும்  அவர்களிடம் எடுத்துச் சொல்லி, அத்தனை பேரையும் கழகத்தில் இணைக்க வேண்டிய முயற்சியில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

மேலும் தேர்தல் காலங்களில் ஆளுங்கட்சியை எதிர்த்து எதிரணியில்தான் அனைவரும் ஒன்று சேர்வார்கள். ஆனால், இன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள், ஆளுங்கட்சியில் உங்களை இணைத்துள்ளீர்கள் என்றால் 2026 தேர்தல் முடிவுகள் உங்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய ஒன்றுதான் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும் என்று கூறினார். 

மேலும் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்,மத்திய அரசு சார்பாக ஒருத்தரை அனுப்பி வைத்துள்ளார்கள் என்றும் அவர் தான் நம்முடைய கவர்னர் என்றும் அவர் என்ன மக்களால் தேர்தெடுக்கப்பட்டவரா? என கேள்வி எழுப்பிய  உதயநிதி ஸ்டாலின்,மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவர் என கூறினார். மேலும் அவர் நம்முடைய தமிழ்நாட்டின் அடையாளங்களை ஒவ்வொன்றாக அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் என்றும்  திருவள்ளுவருக்கு காவிய சாயம் பூசுவது,தமிழ்த்தாய் வாழ்த்தை கொச்சைப்படுத்துவது., தமிழ்த்தாய் வாழ்த்தை பாடக்கூடாது என சொல்வது. சட்டசபையை புறக்கணித்து செல்வதுதான் அவருடைய வேலை என கவர்னரை கடுமையாக அப்போது சாடினார் உதயநிதி ஸ்டாலின்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.