தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் ஒருவர் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரு மகள்கள் இருக்கிறார்கள். அவருடைய மனைவி செயின் பறிப்பை விட்டு விடும் படி பலமுறை தன் கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கேட்காமல் தொடர்ந்து அதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த மனைவி தன்னுடைய இரு மகள்களையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார்.
பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த கணவரை கைது செய்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் காதலுக்காக பெற்றோரை உதறிவிட்டு அந்தப் பெண் திருமணம் செய்து கொண்டு வந்த நிலையில் அவருடைய கணவரோ செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் தன்னுடைய இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.