Kanguva: சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்திற்கு அடுத்த பல்ப் மீண்டும் கிடைத்து இருப்பது ரசிகர்களிடம் அடுத்த ரவுண்ட் கலாய்க்க வழி வகுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா பெரிய பிரேக்கில் இருந்தார். பாலிவுட்டில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அந்த வேலைகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் 900 நாட்களை கடந்து கங்குவா படம் ரிலீஸுக்கு தயாரானது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 2000 கோடி வசூல் குவிக்கும் என பேச்சு அடிப்பட்டது.
ஆனால் படம் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் ஷோவில் இருந்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் குவிந்தது. இதனால் கங்குவா தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் அடி வாங்கியது. 500 கோடி வசூலை கூட நெருங்க முடியாமல் கங்குவா திரைப்படம் பெரிய அளவில் நஷ்டப்பட்டது.
இதை தொடர்ந்து சூர்யா தரப்பு பெரிய அளவில் ரசிகர்களை குற்றம் சாட்டியது. தியேட்டருக்குள் விமர்சனம் கொடுக்க கூடாது. மற்ற மொழியில் படங்கள் எடுக்கப்படும் போது பாராட்டும் ரசிகர்கள் தமிழில் எடுக்கும் போது இப்படி மோசமாக பேசுவது சரியாக இருக்குமா எனவும் பேசி வந்தனர்.
இதை தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கு தங்கள் தயாரிப்பு தரப்பில் இருந்தே தனியாக கங்குவா படத்துக்கு விண்ணப்பித்தனர். இதை தொடர்ந்து படப்பட்டியலில் கங்குவா, ஆடுஜீவிதம் படங்கள் இடம்பெற்றது. முதல் சுற்றில் இந்த பட்டியல் வெளிவர சூர்யா தரப்பு கொண்டாடி தீர்த்தது.
இந்நிலையில் இரண்டாம் தர பட்டியல் வெளியாக அதில் கங்குவா உள்ளிட்ட எந்த இந்திய படங்களுமே இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த பல்ப் எல்லாம் தேவையா உங்களுக்கு எனவும் கலாய்த்து வருகின்றனர்.