ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இந்த விருந்தில் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் என்றுப் பலரும் கலந்துகொள்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த விழாவையொட்டி அளிக்கப்படும் ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை மதிமுக புறக்கணிப்பதாகவும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு விளைவித்து வருகிறார் என்றும், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள சட்ட முன் வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.