நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் இருப்பது போன்ற போட்டோவை எடிட் செய்து கொடுத்தது நான் தான் என்று இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சீமானிடம் கேட்டபோது அவர் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ எடிட் செய்து கொடுத்தது என்றால் அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள். எனக்கு அவரை சந்தித்ததற்கான ஆதாரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று கூறிவிட்டார்.
தயாரிப்பாளர் செங்கோட்டையன் கேட்டதற்காகத்தான் அப்படி ஒரு போட்டோவை எடிட் செய்து கொடுத்ததாக சங்ககிரி ராஜ்குமார் கூறிய நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து தற்போது அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் ராஜீவ் காந்தியும் சீமான் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ எடிட் செய்து கொடுத்தது தான் என்று கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, சீமான் பிரபாகரனுடன் இருப்பது போன்ற போட்டோவை எடிட் செய்யும்போது அதற்கான ஹார்ட் டிஸ்கை வாங்கியது நான்தான். கம்பு சுற்ற வேண்டும் என்றால் களத்திற்கு வரவேண்டும். கட்சியினர் மத்தியில் கற்றக் கூடாது. மேலும் சீமான் கூறுவது அண்டபுளுகு ஆபாச புழுகு என்று கூறினார்.