குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி ஸ்கூல் பீஸ் கட்டவில்லை என கூறப்படுகிறது. இந்த மாணவியின் பெற்றோர் 15,000 பீஸ் கேட்டாதால் பள்ளியில் ஆய்வகத்தில் வைத்து அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும் அந்த மாணவியை மட்டும் தனியாக கீழே அமர வைத்து அவமானப் படுத்துகிறார்கள். இதனால் கூனிக்குறுகி அந்த மாணவி முகத்தை மூடிக்கொண்டு அழுகிறார்.
இதனால் ஏற்பட்ட மன வேதனையில் மாணவி வீட்டிற்கு வந்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மாணவியின் தந்தை கூறும் போது கால அவகாசம் பள்ளியில் கேட்டிருந்த போதிலும் என் மகளை அவமானப்படுத்தி கொலை செய்து விட்டார்கள் என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.