மாருதி சுசூகி வெளியிட்டுள்ள அறிக்கையில் நிறுவனத்தின் தயாரிப்பில் உற்பத்தி பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ளதால், எங்களுடைய கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்களுடைய நிர்வாகம் செலவு குறைப்புக்காக தொடர்ந்து முயற்சி செய்தாலும், அதிகரித்த செலவுகளில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு ஒவ்வொரு கார் மாடல்களுக்கும் ஏற்றார் போல் மாறுபடும், காம்பேக்ட் கார் செலிரியோவின் விலை ரூ.32,500 வரை அதிகரிக்கிறது. பிரீமியம் இன்விக்டோ மாடலின் விலையும் ரூ.30,000 வரை உயரும்.
வேகன்-ஆர் மற்றும் சுவிஃப்ட் போன்ற பிற பிரபலமான மாடல்களின் விலை முறையே ரூ.15,000 மற்றும் ரூ.5,000 வரை உயரும். பிரெசா மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற எஸ்யூவிகளின் விலையும் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.25,000 வரை உயரும்.
ஆல்டோ K10 மற்றும் எஸ்-பிரெசோ போன்ற அடிப்படை மாடல்களின் விலை முறையே ரூ.19,500 மற்றும் ரூ.5,000 வரை உயரும். பிரீமியம் கச்சிதமான பலேனோவின் விலை ரூ.9,000 வரை உயரும், அதே சமயம் பிரான்க்ஸ் மற்றும் டிசையர் ஆகிய கச்சிதமான எஸ்யூவி மற்றும் செடான் ஆகியவற்றின் விலை முறையே ரூ.5,500 மற்றும் ரூ.10,000 வரை உயரும்.மாருதி சுசூகி தற்போது ரூ.3.99 லட்சத்தில் தொடங்கி பிரீமியம் இன்விக்டோ ரூ.28.92 லட்சத்தில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது வரை பல்வேறு வகையான வாகனங்களை வழங்குகிறது