தமிழ் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரவிவர்மன். அந்நியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன் தற்போது பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் ரவிவர்மன் அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ரவிவர்மன் கூறுகையில் “உலகம் முழுவதிலும் இருக்கும் ஒளிப்பதிவாளர்கள் இந்த சங்கத்தில் இணைவதை கனவாக வைத்திருப்பார்கள்.
பல விருதுகளை வென்ற உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் இருக்கும் இந்த சங்கத்தில் நானும் உறுப்பினராக இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெருமையாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.