திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்மாபேட்டை கிராமத்தில் முல்லைவேந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக திருவாலங்காடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயிலில் முல்லைவேந்தன் ஏறினார். கூட்ட நெரிசல் காரணமாக அவர் படியில் நின்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ரயில் திருவாலங்காடு ரயில் நிலையத்தை கடந்த போது எதிர்பாராதவிதமாக முல்லைவேந்தன் கால் தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். அவரது கால்கள் துண்டான நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முல்லை வேந்தனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.