தென்னிந்திய நடிகர்களில் ஒருவரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி 2026 தேர்தலை இலக்காக வைத்து பணியாற்றி வருகிறார். அதன் படி தனது கட்சியின் முதல் மாநாடாக விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக-வின் முதல் மாநாடு பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சமீப காலமாக விஜய்யுடன் ஆதவ் அர்ஜூனா நெருக்கமாக இருந்து வந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிக்காக ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்தை விஜய் ஒப்பந்தம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, மாற்றுக் கட்சியிலிருந்து பிரபலங்கள் தவெகவுக்கு வர விரும்பியதாகவும், தேர்தல் ஆலோசகராக இருந்த ஜான் ஆரோக்கியசாமி அதனை தடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், தவெக மற்றும் புஸ்ஸி ஆனந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேட்டியளித்ததும், விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததனால், தேர்தல் ஆலோசகராக ஆதவ் அர்ஜுனாவை நியமனம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான உடன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று தவெக நிர்வாகிகளுடன் ஆதவ் அர்ஜுனா ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.