“அம்மா… நீ அவர் கூட பழகாத….” கத்தியால் குத்தி குடலை வீசி எறிந்த மகன்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
SeithiSolai Tamil January 30, 2025 03:48 PM

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் சகோதரர்களான சஞ்சய்(27), ஜெயஸ் தாகூர்(23) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது தந்தை உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் இவர்களது தாய்க்கு ரத்தன்ஜி தாக்கூர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த மகன்கள் தாயையும், ரத்தன்ஜியையும் பலமுறை கண்டித்தனர். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் நெருக்கமாக பழகி வந்தனர்.

இதனால் கோபமடைந்த சகோதரர்கள் ரத்தன்ஜியின் வீட்டிற்கு சென்று அவரை கத்தியால் குத்தி தடியால் அடித்தனர். இதனால் குடல் வெளியேறி அவர் உயிருக்கு போராடினார். ஆனாலும் கோபம் அடங்காததால் அவர்கள் ரத்தன்ஜியின் குடலை எடுத்து வெளியே வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்தன்ஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.