உங்க அப்பா கருணாநிதி தான் கூலிக்காரர்… ஜாதி பார்த்து போட்டியிட்ட நீங்க பெரியார் பற்றி பேசலாமா…? எம்பி கனிமொழிக்கு சீமான் பதிலடி..!!
SeithiSolai Tamil January 31, 2025 02:48 AM

திமுக கட்சியின் எம்பி கனிமொழி தளபதி ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில் ஒரு நல்ல எதிரி கூட இல்லை அதிமுகவினர் வளைந்து கொடுத்தே பழகிவிட்டார்கள் பெரியாரையும் தமிழையும் இழிவு படுத்தி பேசும் கூலிக்காரர்களுடன் தான் அரசியல் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என்று கூறினார். சீமானை கூலிக்காரர் என்று கனிமொழி சாடிய நிலையில் இதற்கு தற்போது சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது, நான் பெரியாரைப் பற்றி இழிவாக பேசவில்லை. கருணாநிதி பேசாததையா பேசிவிட்டேன். அப்படி என்றால் உங்கள் தந்தை கருணாநிதி தான் கூலிக்காரர். நீங்கள் உங்கள் தந்தையை தான் எதிர்த்து பேசியுள்ளீர்கள். கனிமொழி ஒரு பெரியாரிஸ்டா இருந்தா எதுக்காக உங்க மருமகன் உதயநிதி நெற்றியில் திருநீர் பூசி விட்டீர்கள். நீங்க கடவுள் மறுப்பாளரா. உங்க கட்சியில் பெண்களுக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள். பெரியார் எங்கே ஜாதி ஒழிப்பை நிலை நாட்டினார்.

தூத்துக்குடியில் ஜாதி பார்த்து போட்டியிட்ட நீங்கலாம் பெரியாரைப் பற்றி பேசலாமா. தமிழ்நாட்டில் இத்தனை தொகுதிகள் இருக்கும்போது நீங்கள் தூத்துக்குடியில் போட்டியிட்டதற்கு காரணம் என்ன. அங்கு ஏமாந்த பாவப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் அவர்களை நம்பி ஏமாற்றி விடலாம் என்பதற்காக தான். உங்களை இன்னமும் அந்த ஜாதிக்காரன் நம்புகிறான் பாருங்கள் அந்த அளவுக்கு அந்த மக்களை நீங்கள் பைத்தியக்கார மக்களாக மாற்றி வைத்துள்ளீர்கள். கருணாநிதி மகள் எப்படி நாடாராக முடியும். அப்ப முக ஸ்டாலின் மற்றும் முக அழகிரி அனைவரும் நாடாரா.? உங்கள் தந்தைக்கு என்ன இரண்டு ஜாதி இருக்கிறதா. அப்புறம் எதுக்காக தூத்துக்குடியில் போட்டியிட்டீர்கள். சும்மா கூலி காலின்னு பேசிட்டு இருக்காதீங்க. மேலும் உங்கள் தந்தை தான் கூலிக்காரர் என்று கூறினார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.