பிப்ரவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை... உங்க பணபரிவர்த்தனைகளை திட்டமிட்டுக்கோங்க!
Dinamaalai January 30, 2025 03:48 PM

இப்போது தான் வருடம் துவங்கியது போல் உள்ள நிலையில், காலண்டர் தாள்களில் ஒரு மாதம் கடந்து விட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை தினங்கள் மாநிலங்களின் உள்ளூர் திருவிழாக்கள், பண்டிகைகளுக்கேற்ப மாறுபடும். உங்க மாநிலத்தில் என்றென்று வங்கி விடுமுறை என தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்கள் பண பரிவர்த்தனைகளைத் திட்டமிட்டுக்கோங்க.

நாடு முழுவதும் அனைத்து தனியார் மற்றும் அரசுத்துறை வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கிகள் செயல்படும் நாட்கள், விடுமுறை நாட்கள் குறித்த முடிவை ரிசர்வ் வங்கி தான் தீர்மானிக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 2025 மாத வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் வங்கி பணிகளை திட்டமிட்டு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  

பிப்ரவரி 2 -  ஞாயிற்றுக்கிழமை  
பிப்ரவரி 3 - சரஸ்வதி பூஜை (அகர்தலா) 
பிப்ரவரி 8 - 2வது சனிக்கிழமை 
பிப்ரவரி 9 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 11- செவ்வாய்க்கிழமை தைப்பூசம் (தமிழகம்) 
பிப்ரவரி 12 - குரு ரவிதாஸ் ஜெயந்தி (சிம்லா) 
பிப்ரவரி 15 - லுய்-நகாய்-நி (இம்பால்) 
பிப்ரவரி 16 - ஞாயிற்றுக்கிழமை 
பிப்ரவரி 19 - சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (மும்பை, நாக்பூர், பெலாப்பூர்) 

பிப்ரவரி 20 - மாநில தினம் (ஐஸ்வால், இட்டாநகர்) 
பிப்ரவரி 22 - 4வது சனிக்கிழமை 
பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 26 - மகா சிவராத்திரி  
பிப்ரவரி 28 - லாசர் (கேங்டாக்).

வங்கிகளின் இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.  இந்திய ரிசர்வ் வங்கியின்படி, அனைத்து மாநிலங்களின் விடுமுறைப் பட்டியலும் வேறுபட்டவையாக இருக்கலாம்.இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு  ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியில்  அவசியமான வேலை இருப்பின் விடுமுறை நாட்களில் ஆன்லைன் வங்கிப்பணிகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.