சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீய கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் பேராசிரியர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதில் ஏ.சி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.